logo
கிறிஸ்துமஸ்: ஈரோடிலுள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ்: ஈரோடிலுள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

25/Dec/2020 10:05:58

ஈரோடு, டிச: கிறிஸ்துமஸ் விழா ஈரோடு மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை வெள்ளிக்கிழமை  உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு ஆராதனை மற்றும் கொண் டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில்நள்ளிரவு 11.30 மணிக்கு சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி(பூஜை) நடந்தது. ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்குத் தந்தையுமான ஜான்சேவியர், உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் ஆகியோர் தலைமையில்  திருப்பலி நடந்தது.  இயேசு கிறிஸ்து மாட்டுக்கொட்டகையில் ஏழ்மை நிலையில் பிறந்ததை நினைவுகூறும் வகையில் குடில் அமைத்து இயேசுவின் பிறப்பு நிகழ்வு  தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. 

இதேபோல், ஈரோடு பிரப் நினைவு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இன்று அதிகாலை 5 மணி முதல் 6.30 வரையும், காலை 8 மணி முதல் 9.30 மணி வரையும் சிறப்பு ஆராதனை நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரப் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதைப்போல் மாநகராட்சி பகுதியில் உள்ள மற்ற ஆலயங்கள், பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்திய மங்கலம், மொடக்குறிச்சி, புஞ்சை புளியம்பட்டி,  கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ள்ளன. அதன்படி முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே தேவாலயத்துக்குள் அனுமதிக் கப்பட்டனர். நுழைவாயிலில் அவர்களது கையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. ஆலயத்துக்குள் சமூக இடைவெளி கடைப்பிடித்து கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புத்தாடைக ளை உடுத்தி ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 


                                                   


Top