logo
புதிய கட்டுப்பாடுகள் அமல் : ஈரோட்டில்  தடையை மீறி  சுற்றியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை

புதிய கட்டுப்பாடுகள் அமல் : ஈரோட்டில் தடையை மீறி சுற்றியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை

15/May/2021 09:18:05

ஈரோடு, மே: புதிய கட்டுப்பாடுகள் அமல் : ஈரோட்டில் காய்கறி,இறைச்சி கடைகள் காலை 10 மணி வரை திறக்கப்பட்டிருந்தன. தடையை மீறி  சுற்றியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2-ஆவது அலை வேகமாக தாக்கி வருகிறது. தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து தமிழக அரசு பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

இதன்படி கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காய்கறி, மளிகை, பலசரக்கு, இறைச்சி, டீ கடைகளுக்கு  காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதைப்போல் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பால், மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இதைப்போல் பெட்ரோல் பங்குகளும் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன. மற்ற அனைத்து வகையான கடைகள் மூடப்பட்டிருந்தன. எனினும் தமிழகத்தில் ஊரடங்கி மதிக்காமல் மக்கள் வெளியே சுற்றிக் கொண்டிருந்தனர்.

ஈரோடு பொறுத்தவரையும் முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டாலும் மக்கள் சர்வசாதாரணமாக சாலையில் நடமாடினர். பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, ஜி ஹெச் ரவுண்டானா போன்ற பகுதியில் வாகனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. போலீசார் இது குறித்து கேட்டால் மருந்து வாங்கச் செல்கிறேன், மருத்துவமனைக்குச் செல்கிறேன், உணவு வாங்க செல்கிறேன் என்று ஏதாவது ஒரு காரணத்தைச்சொல்லி  மக்கள் சென்று கொண்டு இருந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரடங்கு உத்தரவை கடுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

 

 இதையடுத்து ஊரடங்கில்  மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இன்று முதல் காய்கறி மளிகை, பலசரக்கு இறைச்சிக் கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி இன்று இந்த கடைகள் அனைத்தும் காலை 10 மணி வரை மட்டுமே செயல்பட்டது. அதன்பிறகு மூடப்பட்டது. இதைப்போல் தேநீர் கடைகளுக்கு இன்று முதல் அனுமதி மறுக்கப்பட்டது.இதனால் இன்று தேநீர் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இருந்தாலும் ஒரு சில தெருக்கள், சந்து பகுதியில் நடமாடும் டீ கடை வியாபாரம் நடைபெற்றது.

 

ஆனால் வழக்கம்போல் உணவகங்களில் வாசலில் மட்டும் உணவு வழங்கப்பட்டது. காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையும் உணவகங்கள் மொத்தம் அம்மா உணவகங்களில் பார்சல்களில் உணவு வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்பட்டன. அத்தியாவசிய அலுவலகங்கள் 50  சதவீத ஊழியர்கள் உடன்  வழக்கம் போல் செயல்பட்டன.

 

ஊரடங்கை மீறுபவர்கள் மீது, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடைகள் திறந்து வைத்துப் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த இடத்தில் நேற்று முதல் மாவட்டம் முழுவதும் போலீசார் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் தடையை மீறி சுற்றியவர்கள் மீதும், முக கவசம் அணியாதவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தடையை மீறி சுற்றிய இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Top