logo
ஈரோட்டில் மனுநீதி திட்ட முகாமில்: 34 பேருக்கு ரூ.4.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

ஈரோட்டில் மனுநீதி திட்ட முகாமில்: 34 பேருக்கு ரூ.4.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

21/Dec/2020 06:17:22

ஈரோடு, டிச:ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில், பெரியசேமூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மனுநீதி திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. 

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்து  பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மொத்தம் 110 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை அதிகாரிகளிடம் அளித்து  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து  நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்  நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு, வேளாண் துறை சார்பில் ஒருவருக்கு ரூ.72 ஆயிரம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசன உபகரணத்தினையும், சிறுபான்மை நலத்துறை சார்பில் 5 பேருக்கு தலா ரூ.4 ஆயிரத்து 900 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளையும் என மொத்தம் 34 பேருக்கு  ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஆர்.டி.ஓ. சைபுதீன், மாவட்ட சமூக நல அதிகாரி பூங்கோதை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி இளங்கோ, தாசில்தார் பரிமளாதேவி, அ.தி.மு.க. பகுதி செயலாளர் தங்கமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி இணைச்செயலாளர் நந்தகோபால், ஆவின் துணைத்தலைவர் குனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

Top