22/Oct/2020 02:38:23
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2016 முதல் 2019ம் வருடம் வரை நான்கு ஆண்டுகளில் 28 குற்ற வழக்குகளில் பாதிக்கபட்டோருக்கு தமிழகஅரசு, காவல் துறை தலைமை இயக்குநர், ஈரோடு மாவட்ட ஆட்சித்யர் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட பரிந்துரையின் பேரில் ரூ.30 லட்சம் அரசிடமிருந்து பெறப்பட்டு வியாழக்கிழமை (22.10.2020) ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களால் பாதிக்கப்பட்ட 41 நபர்களுக்கு வரைவோலை வழங்கப்பட்டது. இத்தகவலை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.