logo
கரும்பூஞ்சை நோய்க்கு  ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவர் பலி

கரும்பூஞ்சை நோய்க்கு ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவர் பலி

05/Jun/2021 03:44:26

 

புதுக்கோட்டை, ஜூன்:  புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியில் கரும்பூஞ்சை நோய்தொற்றுக்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (60). இவர் மீனாட்சிபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு, சோதனை செய்ததில், கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் உறுதி செய்தனர். ஆனால், கரும்பூஞ்சை நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, சந்திரமோகன் சிகிச்சை பலனின்றி  வெள்ளிக்கிழமை ( 4.6.2021)உயிரிழந்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெள்ளை கொள்ளையை சேர்ந்த செல்வராஜ்( 55) என்பவர் கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டு  மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் 2  நபர்கள் கரும்பூஞ்சைத் தொற்றுக்கு பலியானதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில்  ஆழ்ந்துள்ளனர்.

Top