logo
அரசுப்பள்ளியில் இருந்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இலவச ஆங்கில பேச்சு பயிற்சி

அரசுப்பள்ளியில் இருந்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இலவச ஆங்கில பேச்சு பயிற்சி

17/Dec/2020 08:23:58

தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளித்து வருகின்றனர் நமது நண்பர்கள் எனும் சேவை அமைப்பினர்.

   தமிழக அரசின் 7.5% ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பயின்ற 11 மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரியிலும், 4 பேர் தனியார் மருத்துவக்கல்லூரியில் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று சேர்க்கை முடிந்துள்ள நிலையில், அரசுப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவப்படிப்பை எதிர்கொள்ளும் வகையில்,கீரமங்கலத்தைச் சேர்ந்த “நமது நண்பர்கள்” எனும் சேவை அமைப்பின் சார்பில் குருகுலம் சிவநேசன் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் பேச பயிற்சி அளித்து வருகின்றனர்.அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் பயின்று  மருத்துவம் படிக்க செல்லும் தங்களுக்கு இங்கு வழங்கப்படும் ஆங்கிலப் பேச்சு பயிற்சி பயனுள்ளதாக இருக்குமென மாணவர்கள் தெரிவித்தனர்.

Top