logo
 பிற மாநில தொழிலாளர்கள் நடமாட்டத்தால் கொரோனா தொற்று அபாயம்: ஈரோடு ஆட்சியரிடம் புகார் மனு

பிற மாநில தொழிலாளர்கள் நடமாட்டத்தால் கொரோனா தொற்று அபாயம்: ஈரோடு ஆட்சியரிடம் புகார் மனு

12/May/2021 06:34:09

ஈரோடு, மே: ஈரோடு மாவட்டம், சிப்காட் தொழிற்சாலைகள் இயங்குவதால், பிற மாநில தொழிலாளர்கள் நடமாட்டத்தால் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக  ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம்  சி.கதிரவனிடம், சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி அளித்த மனு விவரம்:

கொரோனா தொற்று பரவலை தடுக்க, பல்வேறு கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல முயற்சி மேற்கொண்டுள்ளன. பெருந்துறை சிப்காட்டில், அனைத்து தொழில் சாலைகளும் முழுமையாக செயல்படுகிறது. இங்குள்ள, 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள், இதர மாவட்ட தொழிலாளர்கள் பணி செய்கின்றனர்.

இவர்கள் அனைவரும் சிப்காட்டை சுற்றி கிராமங்கள், பெருந்துறை போன்ற பகுதிகளில் வசிக்கின்றனர். இங்குள்ள ஆலைகளிலும், சட்ட விரோத ஆலைகளிலும் பணி செய்வோர், வீதிகள், சாலைகள், கடைகளில் சுற்றித்திரிவதால், கொரோனா அச்சம் ஏற்படுகிறது. அரசு அறிவிப்பில், அத்யாவசிய தேவைக்கான தொழிற்சாலைகள் இயக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிப்காட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, காஸ் பில்லிங் தொழிற்சாலை போன்றவை தவிர, டையிங், டெக்ஸ்டைல்ஸ், பனியன், கெமிக்கல், பழைய டயர், டியூப், பேட்டரிகளை உருக்கி மறுசுழற்சி செய்யும் ஆலைகள், இரும்பு, ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலைகள், அலுமினிய தொழிற்சாலைகள், செயற்கை பிசின், கண்ணாடி தொழிற்சாலைகள் போன்றவைகளை ஊரடங்குக்குப்பின் இயக்கலாம்இதனால், வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு அந்நிறுவனம் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என  கேட்டு கொண்டார்.

Top