28/Oct/2020 02:26:30
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல், அரிசி மூட்டைகள் வரவழைக்கப்பட்டு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று திருவாரூர் மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயிலில் 42 பெட்டிகளில் வந்த 2000 டன் நெல் மூட்டைகள் வந்தது. இவற்றை நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் தொழிலாளர்கள் ஏற்றி அரசு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.