logo
திமுக தேர்தல்  அறிக்கை தயாரிக்கும் குழு: புதுக்கோட்டை மாவட்ட திமுகவினருடன்  ஆலோசனை

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு: புதுக்கோட்டை மாவட்ட திமுகவினருடன் ஆலோசனை

07/Dec/2020 09:10:24

புதுக்கோட்டை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு எம்பி மற்றும் குழு உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன் எம்பி, திருச்சி சிவா எம்பி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

மாவட்டப் பொறுப்பாளர்கள் எஸ். ரகுபதி (தெற்கு), கே.கே. செல்லபாண்டியன் (வடக்கு) சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரி யண்ணன் அரசு, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் மாவட்டத்தின் பல்வேறு தரப்பினரையும் கொண்ட குழுவினரை தனித்தனியே இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும்  பெற்றுக் கொண்டனர்.

Top