logo
ஈரோடு வ.உ. சி பூங்கா காய்கறி சந்தையில்  தக்காளி மண்டிக்கு புதிதாக 20 கடைகள் கட்டும் பணி தொடக்கம்

ஈரோடு வ.உ. சி பூங்கா காய்கறி சந்தையில் தக்காளி மண்டிக்கு புதிதாக 20 கடைகள் கட்டும் பணி தொடக்கம்

03/Dec/2020 09:23:42

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. பின்னர் பஸ் போக்குவரத்து சேவை தொடங்கியுடன் காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ. சி பூங்கா பகுதியில் தற்காலிகமாக மாற்றப்பட்டது. ரூ.1 கோடி மதிப்பில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. 

இங்கு தினமும் இரவு முழுவதும் மொத்த வியாபாரமும்  பகலில் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வ உ சி பூங்கா முன் பகுதியில் ஏற்கனவே 20 பழக்கடைகள் கட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில்,  தக்காளி மண்டிக்கு என புதிதாக தனியாக 20 கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

தற்போது தக்காளி சந்தை வெட்டவெளியில் உள்ள காலி இடத்தில் நடந்து வருகிறது. இதனால் பல்வேறு சிரமங்களை வியாபாரிகள் சந்தித்து வந்தனர். இதையடுத்து தக்காளி வியாபாரிகள் தனியாக வ.உ சி பூங்கா வளாகத்தில் 20 கடைகள் அமைக்க முடிவு செய்து இதுகுறித்து மாநகராட்சிக்கு  கோரிக்கை வைத்தனர்.அதைத்தொடர்ந்து புதிதாக கடைகள் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. 


Top