logo
புயல் மழை காலத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை தேவை: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி

புயல் மழை காலத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை தேவை: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி

06/Dec/2020 07:54:17

புதுக்கோட்டை, டிச:  புயல்  மழை காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க  முன்னெச்சரிக்கையுடன் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து   மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்லவேண்டாம். மழையாலும், பெருங்காற்றாலும் மின்சாரக் கம்பிகள் அறுந்து கிடந்தால் அதைத் தொடுவதோ வேறு யாரையும் தொடாமல் பார்த்துக்கொண்டு உடனடியாக மின் வாரிய அலுவலகத்தை பின் வரும் தொலைபேசி எண்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும். ஈரக்கைகளால் மின் சாதனங்களை இயக்கக் கூடாது. மின்சாதனங்களின் ஸ்விட்சை ON /OFF செய்யக்கூடாது  Socket -இல் Plug சொருகுமபோது  Metal Parts ஐ தொடாமல் சொருக வேண்டும். 3 Pin Plug -இல் எர்த் இணைப்பு கண்டிப்பாக செய்யப்படவேண்டும்.

இன்சுலேஷன் இல்லாத மின்சார ஒயர்கள் மற்றும் அறுந்து மற்றும் பழுதடைந்த மின் ஒயர்களை ஒட்டுப்போட்டு உபயோகிக்கக் கூடாது. தரமான  Extension Box -ஐ மட்டுமே தரையில் வைக்காமல் உயரமான இடத்தில் வைத்து உபயோகிக்க வேண்டும். மெயின் ஸ்விட்ச் ஆப் செய்யாமல் எந்த புதிய மின் ஒயரிங்கும் செய்யக் கூடாது.

மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டாதீர்கள். மின் வாரியத்தின் மின்சாரக்கம்பிகளில் மழையின் காரணமாக மரக்கிளைகள் ஏதேனும் விழுந்து விட்டால் அதனை தன்னிச்சையாக அகற்ற முற்படாதீh;கள்.  உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  

மேல்நிலை மின்கம்பியின் உயரத்தை தொடுமளவிற்கு ஏணி, ஈரக்கட்டை மற்றும் இரும்புக் கம்பிகள், கட்டுமானப் பொருட்கள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்லுதல் கூடாது. ஐளுஐ முத்திரை பதிக்கப்பட்ட மின் பொருட்களை சான்றளிக்கப்பட்ட எலக்ட்ரீசியன் மூலமே பொருத்த வேண்டும். வீட்டில் ஒயரிங் செய்வதற்கு ஐஎஸ்ஐ தரமான ஒயர்களை உபயோகிக்க வேண்டும் பழுதான பழைய ஒயர்களை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது.

இடி மின்னல்கள் ஏற்படும்போது மின்பாதையின் கீழ் நிற்காதீPர்கள். பாதுகாப்பாக, வீடு அல்லது கான்கிரீட் கட்டிடத்தின் கீழ் நிற்கவும். வீட்டின் சுவிட்சுகள் மற்றும் மின் சாதனங்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்தும் அவற்றை தொடாதவாறும் பாh;த்துக்கொள்ளுங்கள்.

புயல் மற்றும் வெள்ள காலத்தில் மின்வாயம் சம்மந்தப்பட்ட இடர்ப்பாடுகளை களைய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது:

 அவசர உதவிக்கு மத்திய கட்டுப்பாட்டு அறை 9445853884, 9445853885, 9445853886 என்ற அலைபேசி எண்களுக்கும், புதுக்கோட்டை பகுதி 9445853904, 9445853905, 9445853906 என்ற அலைபேசி எண்களுக்கும், கந்தர்வக்கோட்டை பகுதி 9445853909 என்ற அலைபேசி எண்ணிற்கும், அறந்தாங்கி பகுதி 9445854224, 9445854225, 9445854226 என்ற அலைபேசி எண்களுக்கும், கீரமங்களம் பகுதி 9444099402 என்ற அலைபேசி எண்ணிற்கும் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.


 மேலும், ஆலங்குடி பகுதி 9444099398, 9445854227, 9445854228 என்ற அலைபேசி எண்களுக்கும், வடகாடு பகுதி 9444099401 என்ற அலைபேசி எண்ணிற்கும், கறம்பக்குடி பகுதி 9444099400 என்ற அலைபேசி எண்ணிற்கும், கீரனூர் பகுதி 9445854263, 9445854264, 9445854265 என்ற அலைபேசி எண்களுக்கும், விராலிமலை மற்றும் இலுப்பூர் 9445854266, 9445853908 என்ற அலைபேசி எண்களுக்கும், திருமயம் பகுதி 9445854284, 9445854285 என்ற அலைபேசி எண்களுக்கும், பொன்னமராவதி பகுதி 9445854286 என்ற அலைபேசி எண்ணிற்கும் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். 

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மின்தடை குறித்த புகார்களை 1912  அல்லது 18004254912 மற்றும் 04322-223452 என்ற தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களது மின்தடை குறித்த குறைகளை பதிவு செய்தால் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும். 

Top