logo
புதுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் 108  ஆம்புலன்ஸ் வாகனங்கள்

புதுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்

03/Dec/2020 09:12:45

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருப்பதை தற்போது பார்க்க முடிகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்றும்  நான்கு வீதிகள்  நிர்மாணிக்கப்பட்டது. அகலமான வீதிகள் இதன் பிரதான அம்சம். காலப்போக்கில் வீதிகளின் அகலம் சுருங்கிப் போய்விட்டது.

 மேலும்,   வாகனங்களின் பெருக்கம் , வாகனங்களை ஒழுங்காக நிறுத்தாதது போன்றவைகள் போக்குவரத்தை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கி விட்டது.  பல இடங்களில் விபத்தையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. தற்சமயம் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி உள்ள வீதிகள் கீழராஜவீதி, கீழ இரண்டு,.வடக்கு மற்றும் மேலராஜவீதி.  நெருக்கடி யை உண்டாக்கும் இடங்களாக மாறிவிட்டது. போக்குவரத்து நெருக்கடி இல்லாத நேரமே கிடையாது.

வடக்குராஜவீதிவழியாக மருத்துவக்கல்லூரிக்கு அவ்வப்போதுநோயாளிகளை அவசரசிகிச்சை க்காக கொண்டு செல்லும்  உயிர்காக்கும்  108 ஆம்புலன்ஸ்  வாகனம் போக்குவரத்து நெரிசலால் சிரமத்துடன் ஊர்ந்து செல்கிறது.இன்னும் சில 108  ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெருக்கடியால்இருசக்கரவாகனம், பஸ் கார் ,சரக்கு லாரிகளுக்கு இடையே சுமார் 5 நிமிடத்திற்கு  மேல்  செல்ல முடியாமல் சிக்கித் திணறி வருகின்றன.

மாவட்ட நிர்வாகத்தினர்  போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு மக்களை விபத்திலிருந்து காக்க வேண்டும். முதலாவதாக இருசக்கர வாகனங்களை அதன் எல்லைக்குள் நிறுத்த ஆவன செய்யவேண்டும். அடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்..வடக்குராஜ வீதியை ஒரு வழி சாலையாக மாற்றினால் வாகனங்கள் சிரமப்படாமல் செல்லும்  என்றும்   சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.     


Top