logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட சேதப் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர்  நேரில் ஆய்வு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட சேதப் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் நேரில் ஆய்வு.

05/Feb/2021 03:51:17


புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரிமாதம் பெய்த கனமழையால் சேதமடைந்த  சாகுபடிப் பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள மத்திய குழுவினர்களான சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல மேலாளர்  ரணஞ்சே சிங், மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குநர் ஷுபம் கார்க், மீன்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் பால்பாண்டியன் ஆகியோர்  புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை சேதப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதிப்பு விவரங்களை விவசாயிகளிடம்  கேட்டறிந்தனர்.

 வேளாண்துறை இயக்குநர் வி.தெட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியர்பி.உமாமகேஸ்வரி  ஆகியோர் உடனிருந்தனர்

.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி  2021 வரை சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 11.67 மி.மீட்டர் ஆகும். ஆனால், மாறாக  208 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக 40,669 எக்டர் நெல் பயிரும், மக்காச்சோளம் 169 எக்டரும், உளுந்து 218 எக்டரும், துவரை 27 எக்டரும், நிலக்கடலை 2,238 எக்டரும், எள் 150 எக்டரும், பருத்தி 35 எக்டரும் என ஆக மொத்தம் 43,976 எக்டர் பயிர்கள் உள்ளிட்ட சாகுபடி செய்த பயிர்கள் சேதமடைந்தன. 

 மத்திய குழுவினா; புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், களமாவூர் கிராமத்தில் கனமழையால் பாதிப்படைந்துள்ள நெற் பயிர்களையும், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேலூர் கிராமத்தில் பாதிப்படைந்துள்ள சோளப் பயிர்களையும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆதனக்கோட்டை கிராமத்தில் பாதிப்படைந்துள்ள மரவள்ளி கிழங்கு பயிர்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  இதேபோன்று பயிர் சேதப் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் அலுவலர்களிடம் மத்திய குழுவினர்  கேட்டறிந்தனர்.

 இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி (புதுக்கோட்டை), டெய்சிகுமார் (இலுப்பூர்) உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.. 

Top