logo
விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்ரூ.3.46 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் கவிதாராமு ஆய்வு

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்ரூ.3.46 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் கவிதாராமு ஆய்வு

04/Jul/2021 11:49:30

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:   தமிழக மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஊரக வளர்ச்சித்துறையின்; மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது

அதனடிப்படையில் இன்றைய தினம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தென்னம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நடப்பட்ட மரக்கன்றுகள் நடும் பணியையும், ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் தென்னம்பாடி கணக்கன்குளம் சாலை வரத்துவாரி தூர்வாரும் பணியையும்,


விராலூர் ஊராட்சி, சங்கம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடப்பணியையும், விராலிமலையில் ரூ.2.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் என விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.46 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாக பாரமரிக்கவும், தனிநபர் இல்ல வீடுகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நடைபெறும் பணிகளை தரமாகவும், விரைவாகவும், கட்டி முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுமக்களுக்கான அரசின் வளர்ச்சித்திட்டப் பணிகள் முறையாக நடைபெறுவதை அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர் கவிதாராமு.

இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ரமேஷ், உதவி பொறியாளர்கள் சித்திரவேல், லெட்சுமி, அறிவழகன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top