05/Feb/2021 10:32:08
புதுக்கோட்டை: ஆலங்குடி
அருகேயுள்ள கீழாத்தூர் சமத்துவபுரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் தாய்மார்களுக்கு ஆரோக்ய
பெட்டகம் வழங்கப்பட்டன.
கீழாத்தூர் சமத்துவபுரத்தில் நடைபெற்ற விழாவுக்கு
ஆலங்குடி ரோட்டரி சங்கத் தலைவர் ரமா.ராமநாதன் தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர்
செல்வக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில், முன்னாள் தலைவர்கள் செல்லகணபதி, திருச்செல்வம்,
வடகாடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அப்பகுதியைச்
சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துமாவு, கபசுரகுடிநீர், முகக்கவசம்,
குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய ஆரோக்ய பெட்டகத்தை வழங்கினார்கள்.