logo
டெங்கு தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரம்

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரம்

27/Nov/2020 04:52:12

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து டெங்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உள்ள வீடுகளில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில் கொசு புழுக்கள் உற்பத்தியாகாதவாறு  வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

இதேபோல் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாக வகையில் மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் மழைநீர் வடிகால்களில் தேங்கி இருக்கும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டு வருகிறது. இதுபோல் மாநகராட்சி பகுதியில் உள்ள சாக்கடையில் உள்ள கழிவுகள் தூய்மை  பணியாளர்கள் மூலம்   வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மா.இளங்கோவன் கூறுகையில்,,

தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் டெங்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு மண்டலத்திற்கு 10 பேர்  தலா 40 தூய்மை பணியாளர்கள்  தனியாக  நியமிக்கப்பட்டு மழைநீர் வடிகாலில் ஜேசிபி எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. மேலும் சாக்கடையில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். சளி இருமல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்றார்.

Top