logo
சட்டமன்ற தேர்தல்: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலகங்கள்

சட்டமன்ற தேர்தல்: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலகங்கள்

13/Mar/2021 05:28:27

புதுக்கோட்டை, மார்ச்:சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-இல் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல்  செய்யலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸேவரி வெளியிட்ட தகவல்: சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் 12.3.2021 முதல்  தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில்  178 கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி(தனி)க்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகமும், 179 விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக இலுப்பூர்  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமும் செயல்படுகிறது.

அதே போல 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமும், 181 திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக திருமயம் வட்டாட்சியர் அலுவலகமும்.

182 ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகமும், 183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமாக அறந்தாங்கி சார் ஆட்சியர் அலுவலகமும் செயல்படுகிறது. எனவே வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பமுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தக்க ஆவணங்களுடன் வேட்புமனுவினை தாக்கல் செய்யலாம். 


Top