logo
புதுக்கோட்டையில் களை கட்டியது கிறிஸ்துமஸ்: அலங்கார மின்விளக்குகள், பல வண்ண ஸ்டார்கள் விற்பனை

புதுக்கோட்டையில் களை கட்டியது கிறிஸ்துமஸ்: அலங்கார மின்விளக்குகள், பல வண்ண ஸ்டார்கள் விற்பனை

13/Dec/2020 06:19:56

புதுக்கோட்டை: இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை ஆண்டுதோறும் டிசம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கோலாகலமாககொண்டாடி வருகின்றனர். சில நாடுகளில் ஒரு மாதம் பண்டிகை காலமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடி வருகின்றனர். 

புதுக்கோட்டை  மாவட்டத்தை பொறுத்தவரை டிசம்பர் மாதத்தின் தொடக்கம் முதல் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு தயாராக தொடங்கி விடுவர்கள் . வீடுகளை அலங்கரிப்பது, வர்ணம் தீட்டுவது, மின் விளக்குகளால் அலங்கரிப்பது. ஸ்டார் அமைத்து மின் விளக்கு அலங்காரம் செய்வது,கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லும் வகையில் பாடல்குழுவினர் வீடு வீடாக சென்று பாடல்களை பாடுவதோடு இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பது வழக்கம்

 கிறிஸ்துவின் பிறப்பை வெளிப்படுத்தும் வகையில் வீடுகளில் தருவை புற்கள் வாங்கி  குடில் அமைத்து அதில் சிற்பங்களை வைத்து மின் விளக்குகளால் அலங்கரிப்பது என டிசம்பர் மாதத்தை கிறிஸ்துமஸ் மாதமாக மக்கள் கொண்டாடுகின்றனர்.  இதேபோல் புத்தாடை எடுப்பது, கேக் வகைகள் செய்வது, பட்டாசுகள், அலங்கார பொருட்கள் வாங்குவது என்று மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கத்தயாராகி விட்டனர். வீடுகளை அலங்கரிப்பது, வண்ணம் தீட்டுவது என்று பல்வேறு பணிகளை தொடங்கி உள்ளனர்.

மேலும்,கடைகளில் பல்வேறு வண்ணங்களில் புதுரக ஸ்டார்கள், அலங்கார விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  வீடுகளை அலங்கரிக்கும் பலவண்ண காகிதங்கள், காகித பூக்கள், பல வண்ண மின் விளக்குகளும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி நகரில் பிருந்தாவனம் வடக்கு ராஜ  வீதியில் உள்ள பூரணி  அழைப்பிதழ்  கடை உரிமையாளர் சங்கர்  கூறியதாவது:   கிறிஸ்துமஸ் பண்டிகைக்கானயான வீடுகளை அலங்கரிக்கும் பலவண்ண காகிதங்கள் ஸ்டார்  கிறிஸ்துமஸ் தாத்தா ஆடைகள் தொப்பி மற்றும் மணிகள் குடில் களுக்கான பொம்மைகள்  மெழுகுவர்த்தி  உள்ளிட்டைவைகள் கேரளா,பெங்களுர், சென்னை போன்ற ஊர்களிலிருந்து கொள்முதல் செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம்.

 புதிய மாடல்களில்  அலங்கார பொருட்கள் இருக்கின்றது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் மக்கள் வாடிக்கையாளர்கள் பலர்  இப்போதே   கடைக்கு வந்து பொருட்களை வாங்கி வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்தொடர்ந்து  மழை வந்தால் எங்களது வியாபாரம் பாதிக்கும் எனவும்  கூறினார்

ஆலயங்களில் தூய்மை பணி: 

கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டு தலங்களை திறக்கவும், நிகழ்ச்சிகள் நடத்தவும் அரசு அனுமதித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை  மாவட்டத்தில் சிஎஸ்ஐ சர்ச்சுகள் ,ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள்,  லுத்தரன் மிஷன்,  லண்டன் மிஷன் சர்ச்சுகள், பெந்தேகொஸ்தே ஜெபக்கூடங்கள் என அனைத்து  ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக தூய்மை மற்றும் அலங்காரம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் வண்ணம் தீட்டுவது, ஸ்டார் போடுவது, அலங்கார மின் விளக்குகள் அமைப்பதுபோன்ற  பணிகளை செய்து வருகின்றனர்.

படம்-செய்தி: டீலக்ஸ் ஞானசேகரன், புதுக்கோட்டை.    


Top