logo
கொரோனா தடுப்பூசி லிரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என  தகவல்

கொரோனா தடுப்பூசி லிரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

23/Nov/2020 05:52:11

லண்டன்: கொரோனா தடுப்பூசி வரும்  ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாதிவிலையில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி கிடைக்கும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. தகவல் வெளியாகி உள்ளது. இதே போல அமெரிக்க நிறுவனமான 

 மாடர்னா தயாரிக்கும் தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே கூடிய சீக்கிரம் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.


கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி ஆக்ஸ்போர்ட் கோவிஷீல்டு மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு கிடைக்க உள்ள நிலையில் அது 50 சதவீத விலை குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இங்கிலாந்து நாட்டுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முடிவடைய உள்ள நிலையில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட உள்ளது.

மேலும், அவசர சிகிச்சைக்கு மருந்தை பயன்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசின் ஒப்புதலை அரசு கோரியுள்ளது. இந்நிலையில், சீரம் நிறுவனத்துக்கு இந்த மருந்து இரண்டு மாதங்களில் கிடைக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையான 500 அல்லது 600 ரூபாயில் இந்தியாவுக்கு பாதி விலையில் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

2021 மார்ச்–-ஏப்ரல் மாதத்திற்குள் கோவிஷீல்டு மக்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 2° C முதல் 8° C வரை வெப்பநிலையில் சேமிக்கக்கூடிய இந்த தடுப்பூசி, பொதுமக்களுக்கு தனியார் சந்தையில் ரூ.500 முதல் 600 வரை கிடைக்கும் என்று பூனவல்லா கூறி உள்ளார்.

மாடர்னா தடுப்பூசி: அமெரிக்க நிறுவனம் மாடர்னா தயாரிக்கும் தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே கூடிய சீக்கிரம் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரலாம் என்று நம்பப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த தடுப்பு மருந்தின் விலை  ரூ.1800 முதல் ரூ.2,750 வரை விற்கப்பட உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top