logo
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 55 பேர் மருத்துவக் கவுன்சிலுக்கு தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 55 பேர் மருத்துவக் கவுன்சிலுக்கு தேர்வு

18/Nov/2020 10:29:07

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவிகள் 222 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானதில் 62 பேர் தேர்ச்சி பெற்றனர் .

இந்நிலையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி,டி எஸ் (பல் மருத்துவம்) பயில ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளை சேர்ந்த 55 மாணவ மாணவிகள் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார் . 


                                                                               


Top