01/Dec/2020 09:39:30
ஆலங்குடி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செயலர் வடிவேல் தலைமை வகித்தார். நகரச்செயலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் புதிய வேளாண் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.