logo
ஆலங்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது: 600 லிட்டர் ஊறல பறிமுதல்.

ஆலங்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது: 600 லிட்டர் ஊறல பறிமுதல்.

16/May/2020 06:15:12

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே  கள்ளசாராயம் காய்ச்சியவரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 55 லி சாராயம், 600 லி ஊறல்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

ஆலங்குடி அருகேயுள்ள பெரியாளுரில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, மதுவிலக்கு காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (38) என்பவர் தனது கரும்பு தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கள்ளசாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட 600 லி ஊறல், 55 லி சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து

 ராம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Top