logo
புதுக்கோட்டையில்  காங்கிரஸ்  கட்சி சார்பில் முன்னாள் பாரதபிரதமர்இந்திரா காந்தி பிறந்த நாள்

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரதபிரதமர்இந்திரா காந்தி பிறந்த நாள்

19/Nov/2020 05:29:34

புதுக்கோட்டை காங்கிரஸ்கட்சி  சார்பில்   38 -ஆவது வார்டுக்குள்பட  திருவள்ளுவர் நகர் முதலாம்  வீதியில்    முன்னாள்  பிரதமர்   இந்திரா காந்தி பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது .

 புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தின் தலைவர்கள் முருகேசன், தர்மதங்கவேல் ஆகியோர்   காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றிவைத்தனர் . மாநில  பொது செயலாளர் வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன் ,முன்னாள் நகராட்சி தலைவர்  துரை  திவியநாதன் உள்பட நிர்வாகிகள் அனைவரும்  இந்திரா காந்தி உருவப்படத்திற்கு  மலர் தூவி மாலை அணிவித்து மரியாதையை செய்தனர்.


இதில்,   காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் மாநில  செயற்குழுஉறுப்பினர் ஜிஎஸ். தனபதி, ராமநாதன்,ஏ. இப்ராஹிம் பாபு, காதர்,பாரூக்,  நகரப்பொதுச்செயலர்  காதர்மைதீன்,   ராஜமுகமது ,முகமதுயூசுப் நூர்முகமது சலீம்,தீன், அப்துல்லா காஜாமைதீன் ,நைனாமுகமது,சாகுல்ஹமீது  காஜாமைதீன் உள்ளிட்டநிர்வாகிகள் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராஜ முகமது  செய்திருந்தார்.

                                                                                                                                                                                    முன்னாள் பாரதபிரதமர் இந்திரா காந்தி பற்றி  சில துளிகள்:

இந்திரா பிரியதர்சினி 1917-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் நாள் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார்.

இந்திரா பிரியதர்சினி அவர்களின் ஒரே குழந்தையாவார்.இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, பெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி  இந்திரா காந்தியாக மாறினார்.

இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் 1966-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச்  24. 1977 வரை பதவியில் இருந்தார்.1977-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் மறைந்தார்.

 

Top