logo
புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்கக்காசு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்கக்காசு வழங்கல்

31/May/2021 07:43:02

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், சிடி- ஸ்கேன் ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு  தங்கநாணயம் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.

 

நடிகர் விஜய் ஆணைக்கிணங்க விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலர் முன்னாள் எம்எல்ஏ-புஸ்ஸி என். ஆனந்த் அறிவுறுத்தலின்படிமாவட்ட  தளபதி விஜய்  மக்கள் இயக்கம் சார்பாக  புதுக்கோட்டை  முத்து மீனாட்சி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தலைவரும், சிவகங்கை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளருமான ஜெ. பர்வேஸ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

இது குறித்து மாவட்டத்தலைவர் பர்வேஸ் கூறுகையில், கொரோனா காலத்தில்  தங்களது  உயிரை  பணயம் வைத்து  குடும்பங்களை மறந்து  இரவும் பகலுமாக மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும்  மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்  மற்றும்  சிடி- ஸ்கேன் லேப் டெக்னீசியன் ஆகியோரைப் பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து  பூங்கொத்து வழங்கியதுடன் அனைவருக்கும்   தளபதி விஜயின் பெயர் பொறிக்கப்பட்ட  1  கிராம் தங்க நாணயமும்  மற்றும்  பிரஷர் குக்கரும்  வழங்கி கௌரவிக்கப்பட்டதாகவும்  குறிப்பிட்டார்.

Top