logo
ஈரோடு மாவட்டத்தில் பரவலான மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பரவலான மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

16/Nov/2020 05:28:13

ஈரோடு:  ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 35 மி.மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை  தொடங்கி விட்டதாலும், வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இதில், நேற்று இரவு இடி,மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 35 மி.மீட்டர் மழை பதிவானது.

இதேபோல், மாவட்டத்தில் பிற பகுதியில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

ஈரோடு-5, பெருந்துறை-6, கோபி-2, பவானி-1.8, கொடுமுடி-8.8, சென்னிமலை-26, கவுந்தப்பாடி-3.4, எலந்தகுட்டை மேடு-2.2, மொடக்குறிச்சி-35 என மாவட்டத்தில் மொத்தம் 90.2மில்லி மீட்டர் மழை பொழிந்தது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் இன்று(16.11.2020) குளிர்ச்சியான சூழல் நிலை நிலவியது.

Top