logo
கோபியில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோபியில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

16/Nov/2020 03:17:32

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம் அந்தியூர் பவானி மற்றும் பவானிசாகர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் ஜெயராமன் வெளியிட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வட்டாட்சியர்கள் பெற்றுக்கொண்டனர்.

தமிழக தேர்தல் ஆணையம் 2021 -ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இன்று இந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாகவும் கோட்டாட்சியர்கள் மூலமாகவும் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக பெயர் சேர்ப்பது வாக்காளர் பட்டியலிருந்து பெயர் நீக்கம் பட்டியலிருக்கும் பதிவுகளில் திருத்தம் செய்ய முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதிவரை மேற்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, மற்றும் பவானிசாகர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கோட்;டாட்சியர் ஜெயராமன் வெளியிட அரசியல் கட்சி பிரதிநிதிகள் வட்டாட்சியர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 4,67,182 பேரும் பெண் வாக்காளர்கள் 4,87,184 வாக்காளர்களும் இதர பாலித்தவர் 31பேரும் என மொத்தம் 9,54,397 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்தல் முகவரி மாற்றம் செய்தல் போன்ற பணிகளை எவ்வாறு செய்வது என்றும் அதற்குறிய படிவங்கள் என்னென்ன என்றும் கோட்டாட்சியர் ஜெயராமன் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளித்தார். 

மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் சந்தேங்களுக்கு விளக்கமும் அளித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும் பெயர் சேர்க்கவும் 21.11.2020 22.11.2020 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் அத்தேதிகளில் முகாம்களுக்கு சென்று சரிபார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

Top