logo
இராணியார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

இராணியார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

23/Oct/2020 11:27:24

புதுக்கோட்டை  ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.

பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் சுப. திருச்செல்வம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டக் கல்வி அலுவலர் கே.எஸ். ராஜேந்திரன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள்  நெடுஞ்செழியன், மதியழகன் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள்  தேவேந்திரன், சாந்தி,  உஷா ராணி,  விஜயலட்சுமி, கமலம்,  நாகலட்சுமி , செல்வராணி, உமா மற்றும் முதுகலை ஆசிரியர்கள் ராஜநாராயணன், ரெங்கசாமி உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உதவித் தலைமையாசிரியர் திரு எஸ். ரெங்கராஜூ நன்றி உரையாற்றினார்.

மாணவிகள் முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளிவிட்டு மதிப்பெண் சான்றிதழை பெற்று சென்றனர். 


Top