logo
ஸ்டாலின் முதல்வராக முடியாது- மு.க அழகிரி  கருத்து

ஸ்டாலின் முதல்வராக முடியாது- மு.க அழகிரி கருத்து

04/Jan/2021 04:22:19

மதுரை:   பல நேரங்களில் பல சோதனைகள் நேரலாம், அதை கடந்து வந்திருக்கிறோம்.நான் எப்போதும் உங்களில் ஒருவன்  என்றார் மு.க. அழகிரி.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:திமுகவை விட்டு வைகோ வெளியேறியபோது ஒரு திமுக தொண்டன் கூட வெறியேறவில்லை.திருமங்கலம்   இடைத்தேர்தல் வெற்றியை இந்தியாவே உற்று நோக்கியது.திருமங்கலம் இடைத்தேர்தலில் முதலில் பணி செய்ய விரும்பவில்லை , கலைஞர் கருணாநிதி வலியுறுத்தியதால் தேர்தல் பணி செய்தேன். திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலா என்கிறார்கள்.  ஆனால் அப்படி ஒரு பார்முலா கிடையாது.

திருச்செந்தூர் தொகுதியிலும் கொடுத்த வாக்குறுதியை போலவே வெற்றி பெற்று காட்டினேன்.தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை வற்புறுத்தி கொடுத்ததால்   ஏற்றுக்கொண்டேன்.மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்று கூறினேன். கலைஞர் கருணாநிதிதான் வலுக்கட்டாயமாக கொடுத்தார்.திருமங்கலம் தேர்தலில் ஜெயிக்காமல் இருந்திருந்தால் அப்போது திமுகவின் ஆட்சி கேள்விக்குறியாகி இருக்கும்

கலைஞருக்கு பிறகு திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தொடர வேண்டும் என ஸ்டாலினிடமே கூறினேன்.திமுகவின் எதிர்காலம் நீங்கள்தான் என ஸ்டாலினிடம் நேரிலேயே கூறினேன்.அப்பாவிற்கு பிறகு நீங்கள்தான் திமுகவின் தலைவர் என மு.க.ஸ்டாலின் இடமே கூறினேன்.திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என எனக்கு தெரியவில்லை

ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியை தர கலைஞர் என்னுடன் ஆலோசித்த போது தாராளமாகக் கொடுங்கள் என்று கூறினேன்.திமுகவுக்காக உழைத்த என்னை ஏன் கட்சியில் இருந்து நீக்கினார்கள் என எனக்கு தெரியவில்லை

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எப்போது கட்சியில் சேர்ப்பீர்கள் என கலைஞரிடம் கேட்டேன். இவர்களின் ஆட்டம் அடங்கட்டும் , பொறுத்திரு என்று கூறினார்

திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது. திமுகவின் அடுத்த தலைவர் நீங்கள்தான் என ஸ்டாலினிடம் கூறியது அவரது மனசாட்சிக்கு தெரியும்.கலைஞரைப் போல இன்னொருவர் பிறக்க முடியாது.கலைஞரையே மறந்துவிட்டு தற்போது கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.லைஞரின் பேச்சு , எழுத்து , அவரது அரசியல் சாதுரியம் யாருக்கும் கிடையாது

எதையும் சந்திக்க தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன். நான் எந்த முடிவை அறிவித்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.


Top