logo
உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர் அரசின் சலுகைகள்,மானியங்களை பெற அழைப்பு.

உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர் அரசின் சலுகைகள்,மானியங்களை பெற அழைப்பு.

05/Nov/2020 06:59:21

 மாவட்டத்தில்  உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர் அரசின் சலுகைகள் மற்றும் மானியங்களை பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:   புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018-இன் கீழ் 10 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்யும் உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்கள் விரைவில் அழுகும் தன்மை கொண்டதால், அப்பொருட்களை, அறிவியல் ரீதியாக பதப்படுத்தாவிட்டால் வீணாகிவிடும். நமது நாட்டின் பிற மாநிலங்களில் உள்ளது போலவே, தமிழ்நாட்டிலும், தற்போது 2 சதவீதத்திற்கும் குறைவாகவே வேளாண் பொருட்கள் பதப்படுத்தப்படுகின்றன. வுpவசாயிகள் பயன்பெறும் பொருட்டு, உணவுப்பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் பதப்படுத்துதலை 10 சதவீதத்திற்கும் மேல் அதிகாpப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாநிலத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலினை முன்னேற்றும் விதமாக 2018-2019-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவாறு, தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கையை 12.12.2018 -இல் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை அதிகாpத்தல், உணவுப் பொருட்கள் வீணாவதை குறைத்தல், பண்ணைப் பொருட்களை மதிப்புக் கூட்டுதல் போன்றவை இக்கொள்கையின் முக்கிய குறிக்கோளாகும். தமிழ்நாடு அரசினால் வெளியிடப்பட்ட இக்கொள்கையினால், வேளாண் தொழில் முனைவோர்கள், அதிக எண்ணிக்கையிலான உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஆh;வமுடன் உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது.

உணவு பதப்படுத்தும் கொள்கை 2018-ல், நிலம், நீர், மின்சாரம், முதலீட்டு மானியம் மற்றும் பணி ஊதிய விகித மானியம், வட்டி மானியம், மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வட்டி மானியம், நடுத்தர முதலீட்டு நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை, முத்திரைக் கட்டணத்தில் விலக்கு, சந்தைப்படுத்துதலில் உதவி, தரச்சான்று, போக்குவரத்து வசதி, ஏற்றுமதி ஊக்கத்தொகை, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைத்தல், ஒற்றைச்சாளர வசதி, தொழிலாளர்களுக்கான சலுகைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.

தானியம், பயறு வகைகள், இறைச்சி, மீன், காய்கறி, பழங்கள், எண்ணெய்வித்துக்கள், புரத உணவுகள், மசாலா பொருட்கள், சிப்ஸ், வறுத்த முந்திரி, ரொட்டி, பிஸ்கட், முட்டை, பால், ஆரோக்கிய பானம், வடிகட்டுதல் மற்றும் நொதித்தல் தொழிற்சாலை, பாக்கெட் உணவுகள், பேக்கரி மற்றும் இனிப்பு பண்டங்கள், மூலிகை சார்ந்த மருத்துவ தயாரிப்புகள் மற்றும் இதர வேளாண் பயிர்கள் சார்ந்த பதப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் இத்திட்டத்தில் பயனடையலாம்.

இக்கொள்கை, தனியார் தொழில் முனைவோர்கள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் முதலீடு செய்வதற்கும், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளம் சார்ந்த உணவுப்பொருட்களின் தரத்தை உயர்த்தி, பதப்படுத்தும் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், விவசாய விளைபொருட்களுக்கு ஆதாய விலை கிடைக்கும் என்பதுடன், உணவு பதப்படுத்தும் தொழிலில் அதிக வேலை வாய்ப்பினையும் உருவாக்கும்.

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் கொள்கையினை நமது மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வடிவமைக்கப்பட்டு சமீபத்தில் அங்கீகரிக்ப்பட்டுள்ளன. எனவே ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்யும் உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோர்கள் இந்த கொள்கையின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், மானியங்களை பெற்று பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேளாண் துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) 04322-260688 என்ற  எண்ணில் அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  தெரிவித்துள்ளார். 


Top