logo
ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இயங்கும் வாகனங்கள் பறிமுதல்:  எஸ்பி தங்கதுரை எச்சரிக்கை

ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இயங்கும் வாகனங்கள் பறிமுதல்: எஸ்பி தங்கதுரை எச்சரிக்கை

08/Nov/2020 05:45:30

ஈரோடு மேட்டூர் சாலை மாநகர் பகுதியின் முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டூர் சாலை ஒரு  வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

ஈரோடு மேட்டூர் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக உள்ளது குறிப்பாக வாகன ஓட்டிகள் தங்களது மோட்டார் சைக்கிள்களை சாலையோரம் நிறுத்தி விடுவதால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியவில்லை இதையடுத்து போலீஸார் சார்பில் மேட்டூர் சாலையில் இருபுறமும் கடைகள் முன்னால் சிறிது இடைவெளி விட்டு மஞ்சள் கலர் கயிறு கட்டப்பட்டுள்ளது. இந்த கயிற்றை தாண்டி வாகனங்கள் நிறுத்த கூடாது என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து எஸ்பி தங்கதுரை கூறும்போது, ஈரோடு மேட்டூர் சாலையில் போலீஸார் சார்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலையின் இருபுறமும் மஞ்சள் நிறக் கயிறு கட்டப்பட்டு உள்ளது. இந்த கயிற்றுக்குள் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். ஆனால், கயிறைத் தாண்டி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார். 


Top