06/Nov/2020 01:07:05
கமல்ஹாசன் அவர்களின் 66-வது பிறந்தநாளினை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை மத்திய மாவட்டத்தின் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் 7.11.2020 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம், பெரியார் நகரிலுள்ள மக்கள் நீதி மய்யம், மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இரத்த தானம் வழங்க அனைவரையும் அன்போடு அழைப்பதாக மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு மாவட்டச்செயலர் ஜெய். பார்த்தீபன் தகவல் தெரிவித்துள்ளார்.