30/Apr/2020 09:23:57
புதுக்கோட்டையில் திமுக சார்பில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அக்கட்சியின் சார்பில் மளிகை பொருட்கள்,காய்கறிகள்,அரிசி உள்ளிட்டவற்றை சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு வழங்கினார்.கட்சியின் நகரச் செயலாளர் நைனா முகமது, மாவட்டப் பொருளாளர் ஆ. செந்தில், மாநில விவசாயத் தொழிலாளர் அணி துணைச் செயலாளர் அரு. வீரமணி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன், தொமுச செயலாளர் கணபதி,தொமுச பொதுச்செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.