logo
ஈரோடு மாநகரில் ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 110 பேருக்கு அபராதம்

ஈரோடு மாநகரில் ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 110 பேருக்கு அபராதம்

16/Mar/2021 05:16:04

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாநகரில் ஒரே நாளில் முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 110 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிஇதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இதற்கு, பொது மக்கள் முக கவசம் அணியும் பழக்கத்தை கைவிட்டதுதான் முக்கிய காரணம். இதே போன்ற பொது இடங்களில் கூட்டமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல்  செல்கின்றனர் இதனால் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும்  அபாயம் ஏற்பட்டுள்ளது.

 இதையடுத்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. கதிரவன்  மாவட்டம் முழுவதும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவித்தார். முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ .200 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். 

இதையடுத்து மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறையினர் சுகாதாரத்துறையினர் மாநகராட்சி பணியாளர்கள் போலீஸார் ஒன்றிணைந்து ஆங்காங்கே திடீர் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர்.

இதேபோன்று பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றாத  கடைகளில் நேரடியாக சென்று  ஆய்வு  நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். ஈரோடு மாநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 110 பேருக்கு தலா ரூ 200 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம்  ரூ 22,000 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Top