04/May/2021 07:57:55
ஈரோடு, மே: 2011 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் 3 தொகுதிகளில் திமுக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர்,பவானிசாகர், கோபி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும், தி.மு.க கூட்டணி 3 தொகுதிகளையும் கைப்பற்றியது.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக வெற்றி:
இத்தொகுதியில் அதிமுக சார்பில் கே. ஏ. செங்கோட்டையன், திமுக சார்பில் மணிமாறன் உள்பட 11 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 25 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அதிமுக வேட்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் 1 லட்சத்தி 7 ஆயிரத்து 999 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மணிமாறன் 79 ஆயிரத்து 522 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் 28 ஆயிரத்து 477 வாக்குகள் பெற்று 9-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பவானி தொகுதியில் அதிமுக வெற்றி
இத்தொகுதியில் அதிமுக சார்பில் கே. சி. கருப்பணன், திமுக சார்பில் துரைராஜ் போட்டியிட்டார். கே. சி. கருப்பணன் 1 லட்சத்து 915 வாக்குகள் பெற்றார். துரைராஜ் 78 ஆயிரத்து 392 வாக்குகள் பெற்றார்.இதனால் கே .சி. கருப்பணன்( அதிமுக) 22,523 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார்.
அந்தியூர் தொகுதியில் திமுக வெற்றி:
இத்தொகுதியில் அதிமுக சார்பில் சண்முகவேல் போட்டியிட்டார். திமுக சார்பில் வெங்க டாசலம் போட்டியிட்டார். இதில் வெங்கடாசலம் 79 ஆயிரத்து 96 ஓட்டுகள் பெற்றார். சண்முகவேல் 77 ஆயிரத்து 821 வாக்குகள் பெற்றார்.இதன் மூலம் வெங்கடாசலம்( திமுக) 1275 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெருந்துறை தொகுதியில் அதிமுக வெற்றி:
இத்தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயக்குமார் போட்டியிட்டார். திமுக கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த கே.சி.பாலு போட்டியிட்டார். இதில் ஜெயக்குமார் 85,125 ஓட்டுகள் பெற்றார். கே.சி. பாலு 70 ஆயிரத்து 618 வாக்குகள் பெற்றார். 14 ஆயிரத்து 507 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமார்(அதிமுக) வெற்றி பெற்றார்.
மொடக்குறிச்சி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி:
இத்தொகுதியிஸ் அதிமுக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியில் டாக்டர் சரஸ்வதி போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிட்டார். மிகவும் இழுபறியாக நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி 78 ஆயிரத்து 125 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் சுப்பு லட்சுமி ஜெகதீசன் 77 ஆயிரத்து 844 ஓட்டுகள் பெற்றார். இறுதிச்சுற்றில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி 281 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிமுக வெற்றி:
இத்தொகுதியில் அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி போட்டியிட்டார். இதில் திமுக வேட்பாளர் சு. முத்துசாமி மொத்தம் 1 லட்சத்து 757 ஓட்டுகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.வி. ராமலிங்கம் 78 ஆயிரத்து 668 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் சு.முத்துசாமி( திமுக) 22 ஆயிரத்து 89 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பவானிசாகர் (தனி) தொகுதியில் அதிமுக வெற்றி:
இத்தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் பண்ணாரியம், திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுந்தரமும் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி 99 ஆயிரத்து 181வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரம் 83 ஆயிரத்து 173 வாக்குகளும் பெற்றனர். இதில் அதிமுக வேட்பாளர் பன்னாரி 16 ஆயிரத்து 8 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.