logo
இன்று (நவம்பர்-1) தமிழ்நாடு உதயமான நாள்...

இன்று (நவம்பர்-1) தமிழ்நாடு உதயமான நாள்...

01/Nov/2020 08:16:15

தமிழ்நாடு நாள், 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப்  பிரிக்கப்பட்டது. இதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் நிறுவப்பட்டது. சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு 25 அக்டோபர் 2019 அன்று வெளியிடப்பட்டது.

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடக் கோரி தனி நபராக சங்கரலிங்கனார் எனும் முதியவர் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்நீத்தார். பின்னர், சென்னை மாகாண முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா 18 ஜூலை 1968-இல் சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப்பெயர் மாற்றினார்.

 தென்னிந்தியாவில் மிக தீவிரமாக திராவிடம் பேசும் மாநிலத்தில் முதல் முறையாக தமிழ்நாடு தினம், தமிழர் நாள் என்றெல்லாம் கொண்டாட்டம் தொடங்கியிருப்பது யாருடைய வெற்றியாக கருதுகிறீர்கள்.  மொழிவாரியாக மாநிலம் அமைந்ததை பிற திராவிட மாநிலங்கள் வெகுகாலமாகவே தனியே கொடிகள் உருவச்சிலைகள் அமைத்து திருவிழாவை போல் சிறப்பித்து வருகிறார்கள். தமிழகம் மட்டுமே திராவிட கொள்கைகளில் ஊறிபோய் திராவிடர் நாடு என்றெல்லாம் பேசி கொண்டிருந்தது.

ஒரு தீவிர திராவிட சிந்தனையில் இருந்து சற்றுவிலகி தமிழ்தேசிய சிந்தனைகளை நோக்கி முதல் அடியை திராவிட கட்சிகளே எடுத்து வைத்திருப்பதாகவே தமிழ்நாடு தினத்தின் கொண்டாட்ட அறிவிப்பை பார்க்கிறேன். இந்த மனமாற்றத்தை விரும்பியோ, விரும்பாமலோ திராவிட அரசியல் கட்சிகள் தொடங்கியிருப்பதற்கான அழுத்ததை கடந்த பத்தாண்டுகளில் தந்தது சீமானும் நாம் தமிழர் கட்சியும் மட்டுமே. தேர்தல் அரசியலில் தோற்பதுயெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தோல்வி ஆகாது. பெரும்பான்மையாக திராவிட சித்தாந்தம்   பேசும் மாநிலத்தில் ஒரு சிறிய கூட்டத்தை கணிசமாக தமிழ்தேசிய சிந்தனையை இந்த காலகட்டத்தில் பேச வைத்ததில் சீமான் என்கிற தனிமனிதனின் உழைப்பு அதிகம்.

வருங்காலத்தில் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரிய வெற்றியை பெறாமல் போகலாம்.ஆனால், இந்திய தேசியத்தில் தமிழ்நாடு உதித்ததை ஆளும் அரசே கொண்டாட வேண்டிய தருணத்தை ஏற்படுத்திய வெற்றியை விட தேர்தல் வெற்றிகள் பெரிதல்ல. ஆம் தன்னுடைய சித்தாந்தம்  வெற்றி பெறுவதே ஒரு தலைவனின் வெற்றியும்தான் என்கிறார் பா. வெங்கடேசன்.


Top