logo
 கோயிலுக்காக வளர்த்த தாடியை கிண்டல் செய்த நண்பனை கொலை செய்த கூலித்தொழிலாளி கைது

கோயிலுக்காக வளர்த்த தாடியை கிண்டல் செய்த நண்பனை கொலை செய்த கூலித்தொழிலாளி கைது

30/Oct/2020 04:12:49

ஈரோடு: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). இதேபோல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (38). இருவரும் நண்பர்கள். இருவரும் ஈரோட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். வேலை முடிந்ததும் இரவில் மணிக்கூண்டு பகுதியில்  சாலையோரம் தங்குவது வழக்கம். நண்பர்கள் இருவரும் அவ்வப்போது இரவு நேரங்களில் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம்.

அதைப்போல் நேற்று முந்தினம் நள்ளிரவு இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது பின்னர் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் தன் மறைத்து வைத்திருந்த ஆக்சிஸ் பிளேடால் பெருமாள் கழுத்தை அறுத்துப் போட்டுவிட்டு  அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதில்  பலத்த காயமடைந்த  பெருமாள்  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தங்கதுரை டவுன் டிஎஸ்பி ராஜு, இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத் மணிகண்டன் பாலமுருகன் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  சென்று  பெருமாளின் பிரேதத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் கொலையாளி பெருமாளை போலீசார் கைது செய்தனர். 

போலீசாரிடம் கொலைக்கான காரணம் குறித்து லட்சுமணன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: நானும் பெருமாளும் நண்பர்கள் . 2 பேரும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வந்தோம். இரவு நேரங்களில் மணிக்கூண்டு  பகுதியில்  சாவையோரம் தங்குவது வழக்கம். அதைப்போல் நேற்று முன்தினம் மணிக்கூண்டு விநாயகர் கோயில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தோம்

. அப்போது நான் கோயிலுக்காக வளர்ந்திருந்த தாடியை பார்த்து கிண்டல் செய்து என்னை அடித்து சாக்கடையில் தள்ளினார். இதில் ஆத்திரமடைந்த நான் பிளேடால் பெருமாளின் கழுத்தை அறுத்து அங்கிருந்து சென்று விட்டேன். அதன் பின்னர் தான் பெருமாள் இறந்தது தெரியவந்தது. இவ்வாறு  அவர் கூறியுள்ளார்.

Top