logo
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்..

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்..

30/Oct/2020 02:21:18

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு. மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இன்று ஒப்புதல் அளித்தார் .

செப்.26-ஆம் தேதி சொலிசிட்டர் ஜெனரலிடம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. சொலிசிட்டர் ஜெனரலிடம் இருந்து நேற்று ஆளுநருக்கு கருத்து வந்தது. அதைத்தொடர்ந்து 7.5% இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர்  இன்று ஒப்புதல்   அளித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதைத்தொடர்ந்து உள் ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க 3 அல்லது 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.

7.5% உள் ஒதுக்கீடுக்கு  45 நாட்கள் ஆகியும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை .

இதுகுறித்து நீதிமன்றமும் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என நம்புவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு சட்டப்பேரவையில்   நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா-அரசாணையா தமிழக அரசு  வெளியிட்டது.

மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு அரசாணை  நேற்று வெளியிட்டது. இந்நிலையில்,    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு. மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆளுநர்- தமிழக அரசுக்கு  இடையேயான   பனிப்போர் முடிவுக்கு வந்தது.


Top