logo
வன்னியர்களுக்கு 20 %  இட ஒதுக்கீடு கேட்டு ஜன.29-இல் ஈரோட்டில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு கேட்டு ஜன.29-இல் ஈரோட்டில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

21/Jan/2021 11:05:08

ஈரோடு, ஜன: ஈரோடு பேருந்து நிலையம் அருகே  உள்ள நல்லி அரங்கில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி ஆகியோர் வழிகாட்டுதலின்படி  மாநில துணைப் பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில்   வியாழக்கிழமை நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில்  இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில துணை பொது செயலாளர் கோபால் வரவேற்றார். பசுமை தாயக மாநில இணைச்செயலாளர் சத்ரிய சேகர் சிறப்பு அழைப்பாளாராகக் கலந்து கொண்டார். மாநில துணை தலைவர்கள் எஸ்.எல்.ப ரமசிவம், எம்.பி .வெங்கடாசலம், என்.ஆர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்,  வருகிற 29.1.2021 -ஆம் தேதி வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு  வழங்க வலியுறுத்தி  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

இதில், மாவட்ட செயலாளர்கள் பிரபு, ஆசை மனோகரன், சசிமோகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், ராஜேந்திரன், அருள்மொழி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக் முகைதீன், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர்கள் செல்வராசு, திருமுருகன், தலைவர் பெருமாள், மாநில துணை அமைப்பு செயலாளர் செங்கோட்டையன், இளைஞரணி மாநில துணைத்தலைவர் விக்னேஸ்வரன், இளைஞரணி மாநில துணைச்செயலாளர் சிவன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top