logo
12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: கட்டிடத்தொழிலாளி கைது

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: கட்டிடத்தொழிலாளி கைது

09/Jul/2021 04:15:21

ஈரோடு, ஜூலை:ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவன் குமார் என்கிற சரவணன்(37). கட்டிடத்தொழிலாளி இவனுக்கு திருமணமாகிவிட்டது. இவர் தான் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுமியை மிரட்டி கடந்த 2 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியதைடுத்து பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் பேரில் ஆய்வாளர் தவுலத்நிஷா வழக்கு பதிவு செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கட்டிடத்தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

Top