logo

இறந்தவர்களின் சடலத்தை புதைக்கக்கூட இடம் கிடைக்காத அவலம்- பழங்குடியின மக்கள் வேதனை

29/Oct/2020 09:13:54

ஈரோடு:  நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளாகியும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு இறந்தவர்களின் சடலத்தை புதைக்கக்கூட இடம் இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது. 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் வெள்ளாளபாளையம் அம்பேத்கர் காலனியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குள்ள அசு புறம்போக்கு நிலத்தை பல்லாண்டு காலமாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடத்தில் உள்ள ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருவதோடு இறந்தவர்களின் சடலத்தை புதைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தமிழக அரசு வருவாய்துறையினருக்கு மனு அளித்தும் இதுவரை ஆக்கிரமிப்பு செய்துள்ள பொன்னுச்சாமி கம்பம் நட்டு இந்து முன்னனி கொடியை கட்டி உள்ளார். கடந்த 30 -ஆம் தேதியன்று அம்பேத்கர் காலனியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் உயிர் இழந்த நிலையில் அங்குள்ள மயானத்தில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆக்கிரமிப்பு உள்ள இடத்தில் கம்பி வேலியையும் போட்டு உள்ளே நுழையாதபடி தடுத்துள்ளார். 

இந்த நிலையில், இறந்தவரின் சடலத்தை புதைக்க நடந்த போராட்த்தின் காரணமாக அரசு அதிகாரிகளின் தலையீட்டின் பேரில் கம்பி வேலி அகற்றி இறந்தவரின் சடலத்தை ஆக்கிரமிப்பாலர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து பள்ளத்தில் புதைத்துள்ளனர். இது தாழ்த்தப்பட்ட மக்களை உயர்ஜாதியினர் தொடுக்கும் சமூக தாக்குதலாகவே உள்ளது. இந்த சமூக விரோத செயலுக்கு காரணமானவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு மௌனம் சாதித்து வருகிறது.

 ஆகவே, மேற்கண்ட பிரச்சனையின் மீது தமிழக அரசும் சம்பந்தப்பட்ட நிர்வாகமும் உடனே தலையிட்டு நம்பியூர் வெள்ளாளபாளையம் அம்பேத்கர் காலனி ,பகுதி மக்களின் மயான ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றியும் மயானத்தில் புதைத்த சுப்பிரமணி என்பவரின் சடலத்தை தோண்டி எடுத்து பள்ளத்தில் புதைத்த நபரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சட்டப்படி உரிய தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்யதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுகாத பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக சிபிஎம் அறிவித்துள்ளது 


Top