logo
7 மாதங்களாகப் பிரிந்திருந்த மகன், மகளைப் பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் 1400 கிமீ பயணித்து புதுக்கோட்டை வந்த தம்பதி

7 மாதங்களாகப் பிரிந்திருந்த மகன், மகளைப் பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் 1400 கிமீ பயணித்து புதுக்கோட்டை வந்த தம்பதி

27/Oct/2020 01:55:17

புதுக்கோட்டை: மும்பையில் குடியேறிய புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சோர்ந்த தம்பதி பொது முடக்கத்தால் கடந்த 7 மாதங்களாகப் பிரிந்திருந்த தனது மகன், மகளைப்  பார்ப்பதற்காக 1400 கி.மீ. தொலைவை 37 மணி நேரத்தில் கடந்து இரு சக்கர வாகனத்திலேயே கறம்பக்குடி வந்து சேர்ந்துள்ளனர். 

கறம்பக்குடியைச் சேர்ந்து மழைந்த ராமையா துறைமுகப் பணி நிமித்தமாக மும்பையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினார். அவரது 3 மகன்களில் ஒருவர் ஆர். செல்லம் (41). இவர் மும்பையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி சங்கீதா (36), மகள் வேணி (13), மகன் யோகேஷ்வா(6) ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 20 -ஆம் தேதி கறம்பக்குடி வந்த இவர்கள், கொரோனா பொது முடக்கம் அறிவித்த பிறகு சங்கீதாவின் தந்தை வீட்டில் மகள், மகன் இருவரையும் விட்டுவிட்டு மும்பை திரும்பியுள்ளனர்.

அதன்பிறகு அவர்களால் கறம்பக்குடிக்கு திரும்ப வர இயலவில்லை. ஏறத்தாழ 7 மாதங்கள் கடந்தது.  தற்போது பொது முடக்கத்தில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருந் தாலும் மும்பையிலிருந்து தமிழகத்துக்கு ரயில் சேவை தொடங்கப்பட வில்லை. இந்தச் சூழலில், யோகேஷ்வருக்கு அக், 22 -ஆம் தேதி பிறந்த நாள் என்பதால் விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு வசதியில்லாததால் குழந்தைகளைப் பார்க்க தம்பதியினர் தங்களது இரு சக்கர வாகனத்திலேயே கறம்பக்குடி செல்வது என்று துணிச்சலான முடிவெடுத்தனர். 

இருசக்கர வாகனத்தில் மும்பையிலிருந்து கறம்பக்குடி வந்த ஆர். செல்வம்-சங்கீதா தம்பதியினர். மும்பையில் தங்களது. குடும்ப மருத்துவரிடம் இருவருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்ற பரிசோதனைச் சான்றைப் பெற்றுக் கொண்டு அக் 20-ஆம் தேதி பயணத்தைத் தொடங்கினர். முதல் நாள் கோல்ஹபூரில் தங்கி இரண்டாம் நாள் பெங்களூருவில் தங்கி, சரியாக 1400 கி.மீ தொலைவை 37 மணி நேரத்தில் கடந்து தங்களது  செல்ல மகனின் பிறந்தநாளான அக். 22 -ஆம் தேதி இரவு புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடிக்கு வந்து சேர்ந்தனர். 

தங்களது அசாத்திய பயணம் குறித்து செல்வம் கூறியதாவது, மும்பையிலிருந்து மேற்கொண்ட பயணத்திற்காக சுமார் ரூ.7 ஆயிரம் செலவாகியிருக்கிறது. இங்கு வந்தவுடன் சுகாதாரத் துறையில் இருந்து ஒரு மருத்துவர் வந்து பரிசோதித்துச் சென்றிருக்கிறார். 5 நாள்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகே மகளையும், மகனையும் சந்திக்கப் போகிறோம்.

கிராமத்துச் சூழல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இதுவரை எங்களின் குழந்தைகளை மிகச் சில நாள்கள் கூடப் பிரிந்திருந்ததில்லை. இப்போதுதான் அதிகபட்சமாக 7 மாதங்ள் பிரிந்திருக்க வேண்டியதாகிவிட்டது. அதனால்தான்  நாங்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதென்ற  முடிவை எடுக்க நேரிட்டது.  விரைவில்மும்பைக்கு ரயில் வசதி தொடங்கிவிடும் என எதிர்பார்க்கிறோம்.  குடும்பத்துடன் மும்பை சென்று விடுவோம் என்றார் செல்வம்,

Top