logo
புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்

24/Mar/2021 04:28:14

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.ஆர். கார்த்திக்தொண்டைமானை ஆதரித்து அமைச்சர் சி. விஜயபாஸ்கர் புதன்கிழமை பிரசாரம் செய்தார்.

புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திருக்கோகர்ணம் புதுத்தெரு, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி ,அண்ணாசிலை ,எம்ஜிஆர் சிலை உள்ளிட்ட நகராட்சிப் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்று  கார்த்திக் தொண்டைமானுக்கு ஆதரவாக தமிழக அரசின் நலத்திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


Top