logo
புதுகை மனோன்மணி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

புதுகை மனோன்மணி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

27/Oct/2020 12:33:45

புதுக்கோட்டை கிழக்குராஜ வீதியில் உள்ள அருள்மிகு மனோன்மணி அம்மன் கோயிலில் நவராத்திரி கடைசி நாளான நேற்று அம்பாளுக்கு லலிதா திரிபுரசுந்தரி அலங்காரம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  அருள்மிகு மனோன்மணி அம்மன் கோயில்  நகரின் முக்கிய  பகுதியான கிழக்குராஜவீதியில்  அமைந்துள்ளது. இக்கோயிலில் 37 -ஆம் ஆண்டு நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு கடைசி நாளான  நேற்று இரவு அம்மனுக்கு லலிதா திருபுரசுந்தரி அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக கன்யா பூஜை சுகாசினி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர் .மூலவர் மனோன்மணி அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத் து ஸ்ரீ சாய் சத்குரு நாட்டியாலயா சார்பில் ஆலயத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆன்மீக பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடினார்கள் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து நாட்டியத்தையும் கண்டுகளித்தனர். வந்திருந்த பக்தர்களுக்கு  பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Top