logo
ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு

ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு

06/Jul/2021 12:15:58

ஈரோடு, ஜூலை: ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு எஸ்.பி.அலுவலகத்திற்கு இன்று குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குறிஞ்சி சந்திரசேகரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து ஒரு பரபரப்பான மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு  மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன். இந்நிலையில் ரவுடி பேபி சூர்யா என்ற பெண் சமூக வலைத்தளங்களில் எங்கள் இனத்தை குறித்து அவதூறாக பேசி வருகிறார். 

இதனால் எங்கள் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் பெண்கள் மக்கள் மீது தவறான பார்வை விழுந்துள்ளது இதனால் நாங்கள் மன உளைச்சலில் உள்ளோம். எனவே சூர்யா ரவுடி பேபி 22 ,  என்கிற யூடியூப் சேனலை தடைசெய்து ரவுடி பேபி சூர்யா என்ற பெண் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

Top