logo
மலைவாழ் குழந்தைகளுக்காக வீடுவீடாகச் சென்று புத்தகம்,பழைய,புதிய துணிகள் பெறும் நிகழ்வு: மாநகராட்சி ஆணையர் தொடக்கி வைப்பு

மலைவாழ் குழந்தைகளுக்காக வீடுவீடாகச் சென்று புத்தகம்,பழைய,புதிய துணிகள் பெறும் நிகழ்வு: மாநகராட்சி ஆணையர் தொடக்கி வைப்பு

26/Oct/2020 05:47:26

ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் சத்தியமங்கலம் அருகில் உள்ள கடம்பூர் அடுத்த குன்றி, அணில் நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் படிக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் தங்களது பகுத்தறிவை வளர்ப்பதற்காக அவர்களின் வேண்டுகோளை ஏற்று அந்த கிராமத்தில் நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. 

அந்த நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை உணர்வுகள் அமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடமிருந்து பழைய மற்றும் புதிய புத்தகங்கள், பழைய மற்றும் புதிய துணிகள் குழந்தைகளுக்காக பெறப்பட்டது. 

இந்த நிகழ்வினை, ஈரோடு மாநகராட்சியில் ஆணையர் மா. இளங்கோவன் தனது வீட்டில் குழந்தைகள் படித்த புதிய மற்றும் பழைய புத்தகங்களையும் வழங்கி தொடங்கி வைத்தார்.

குறிப்பிட்ட அளவிற்கு புத்தகங்களை மற்றவர்களிடம் இருந்து பெற்று தருவதாகவும் ஆணையர் குறிப்பிட்டார்.  தொடர்ந்து பெரியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளிலும், சம்பத் நகர் பகுதியில் உள்ள வீடுகளிலும் புத்தகங்கள் பெறப்பட்டன.

 இந்த நிகழ்வில் திட்ட இயக்குனர்கள் மேகலா, பிரபு, புவனேஷ், ஆரிப் அலி, நாடகக் கொட்டகை சதீஷ், சுஜித், மேகா, ஸ்மிதா, சர்வேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Top