logo
சரஸவதி பூஜை- ஆயுதபூஜை:  மக்கள் சிறப்பு வழிபாடு

சரஸவதி பூஜை- ஆயுதபூஜை: மக்கள் சிறப்பு வழிபாடு

26/Oct/2020 07:57:51

புதுக்கோட்டை: செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அந்த வகையில் நவராத்திரி ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என கொண்டாடப்படுகிறது.

ஒரு பெண்ணின் கையால் தான் இறக்க வேண்டும் என்ற வரத்தை வாங்கினான் மகிஷாசுரன். ஏனெனில் ஒரு பெண்ணால் தன்னை கொல்ல முடியாது என்ற ஆணவத்தில் இருந்தான். அதையடுத்து தான் சாகா வரம் பெற்ற எண்ணத்தில் இருந்த மகிஷாசுரன் விண்ணவர்களுக்கும், மண்ணவர்களுக்கும் கொடுமை நிகழ்த்தி வந்த மகிஷாசுரன் தான் இந்த லோகத்தின் கடவுள் என அனைவரையும் ஆட்டிப்படைத்தான்.அவனின் அட்டூழியத்தை ஒடுக்கி அனைவரையும் காக்க மூன்று தேவிகளும் சேர்ந்து துர்க்கை அம்மனாக விரதமிருந்து, 8 நாட்கள் கடும் போர் செய்து, 9-வது நாளில் மகிஷனை கொன்றார் அன்னை.  

முதல் மூன்று நாள் பார்வதி தேவியின் அலங்காரமும், அடுத்த மூன்று நாள் மகாலட்சுமி தேவியின் அலங்காரமும், கடைசி மூன்று நாள் சரஸ்வதி தேவியின் அம்சமாக வணங்கப்படுகிறது.மகிஷனைக் கொல்ல ஆயுதங்களை பூஜித்த நாள் தான் நாம் ஆயுத பூஜையாகவும், சரஸ்வதி பூஜையாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றோம். 

மகிஷாசுரனை  கொல்ல அன்னைஆயுதங்களைப் பூஜித்ததைப் போல, நாமும், நம் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தும் உபகரணங்களை வணங்கும் பொருட்டு விமர்சையாக கொண்டாடி வருகிறோம்.

புதுக்கோட்டை சாந்தநாதர் ஆலயத்திலுள்ள சரஸ்வதி சந்நிதியில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Top