logo
உலக போலியோ தினம்: அறந்தாங்கி ரோட்டரி,புதுகை சென்ட்ரல் ரோட்டரி சங்க சார்பில் சைக்கிள் பேரணி

உலக போலியோ தினம்: அறந்தாங்கி ரோட்டரி,புதுகை சென்ட்ரல் ரோட்டரி சங்க சார்பில் சைக்கிள் பேரணி

25/Oct/2020 11:01:36

புதுக்கோட்டை: உலக போலியோ தினத்தினை முன்னிட்டு அறந்தாங்கி ரோட்டரி சங்கமும் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும் இணைந்து மாபெரும் சைக்கிள் பேரணியை நடத்தியது.

அறந்தாங்கி ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர். ராமன் பரத்வாஜ், புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் மதிவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்புத் திட்டங்களின் துணைத் தலைவர் கவி.கார்த்திக், ரோட்டரி துணை ஆளுநர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜயா துரைராஜ், ஹபிபுல்லா, ராணி ரோஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி மாவட்ட சிறப்பு திட்டங்களின் தலைவர் மணி, ரோட்டரி மாவட்ட செயலாளர்கள் பொறியாளர் கனகராஜன், ஆறுமுகம், ஜெய் பார்த்தீபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பொறியாளர் பஷீர் முகமது, பொறியாளர் கர்ணன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையிலிருந்து தொடங்கிய பேரணி அறந்தாங்கி வரை சென்று மீண்டும் புதுக்கோட்டை வந்தடைந்தது. இதில் போலியோ நோய் தொடர்பான விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளுடன் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதில், TN 55 சைக்கிள் கிளப்பை சேர்ந்த கிருஷ்ணகுமார், தனசேகரன், செந்தில்குமார், ரவி, கிருஷ்ணகுமார், சதீஷ், பாலா, முருகேசன், ஆகியோர் உள்பட ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்று செல்லும் வழிகளில் பொதுமக்களுக்கு போலியோ நோய் குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர்.

பேரணியில் பங்கேற்று திரும்பியவர்களை புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார், மஹாராணி ரோட்டரி சங்கத்தின் தலைவர் சினேகா ஆகியோர் வாழ்த்திப்பேசினர். ஏற்பாடுகளை புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் கோபிநாத், முன்னாள் தலைவர்கள் சிவாஜி, கதிரேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிறைவில் அறந்தாங்கி ரோட்டரி சங்க செயலாளர் வீரமாகாளியப்பன் நன்றி கூறினார்

Top