logo
மழை, வெள்ளம், பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கை குறித்து ஆலோசனை

மழை, வெள்ளம், பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

25/Oct/2020 09:09:43

ஈரோடு:தேசிய பேரிடர் மீட்பு   படை வீரர்கள்  மற்றும் தீயணைப்பு  துறையினர்   இணைந்து  மழை வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை   நடவடிக்கைகள் குறித்து வருவாய்துறை  அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தேசிய பேரிடர் மீட்பு படையினர்  பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு   படை வீரர்கள்  மற்றும் தீயனைப்பு  துறையினர்    இனைந்து  மழை வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை   நடவடிக்கைகள் குறித்து வருவாய்துறை  அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

இதில், மழை வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களினால் உருவாகும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்கென இந்தியா முழுவதும் மீட்பு பயிற்சி பெற்ற வீர்ர்களை ஒருங்கிணைத்து தேசிய பேரிடர் மீட்பு வீரர்கள் படை உருவாக்கப்பட்டு கேரளா, தமிழகம் அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்காக பயிற்சி பெற்ற குழுவினர் 24 மணி நேரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையின்   அரக்கோணம் பிரிவை சேர்ந்த வீரர்கள் குழு தமிழகம் முழுவதும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேசிய மீட்பு  படையினர் வருவாய்துறை ஊழியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். 

கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோபி தீயணைப்பு நிலைய அலுவலர்  ஆறுமுகம் மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள்  பலர் கலந்து கொண்டு கொரோனா தொற்றிலிருத்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்ற உறுதி ஏற்றுக்கொண்டனர். 


Top