23/Apr/2021 11:42:20
புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகையை காணவில்லை என்று அந்த நிதி நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நிதி நிறுவனத்தில் பணிபுரியும் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியிலுள்ள மண்டல மேலாளர் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டையில் பணியாற்றிய கிளை மேலாளர் உமாசங்கர், ஊழியர்கள் சோலைமணி, முத்துக்குமார் ஆகிய 3 பேர் மீது கணேஷ் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டையிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த நகைகள் அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .