logo
ஈரோடு மாவட்ட அரசு - தனியார் டாக்டர்கள், செவிலியர்கள்  பற்றிய விவரங்கள் சேகரிப்பு

ஈரோடு மாவட்ட அரசு - தனியார் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றிய விவரங்கள் சேகரிப்பு

23/Oct/2020 06:04:33

ஈரோடு: கொரோனா  வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்கள பணியாளர்களான டாக்டர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சுகாதார பணியாளர்கள் அரசு உயர் அதிகாரிகள் போலீஸார் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக தனியார்  ஆஸ்பத்திரி டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் சுகாதாரத் துறையினர் முழுவதுமாக தங்களை அர்ப்பணித்து வைரஸ் பாதித்த நோயாளிகளை குணமடைய செய்து வருகின்றனர்.

 இந்தக் கொடிய வைரஸுக்கு  இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது இந்தியாவிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவை மூன்றாம் கற்ற பரிசோதனையில் உள்ளது. அவ்வாறு தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் அதை முதலில் முன் களப்பணியாளர்களான டாக்டர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்த  முடிவு செய்துள்ளது. 

அதன்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள டாக்டர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து தருமாறு சுகாதார பணியாளர்களுக்கு அரசு  ஈரோடு மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் நர்சுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் நர்சுகள் சுகாதாரத்துறை ஊழியர்கள் லேப் டெக்னீசியன், மருந்தக ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஆகியோரின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு சுகாதாரத் துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையினர் இவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். இவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் போது அவர்களின் ஏதாவது ஒரு அடையாள அட்டை, வாக்காளர் அட்டை ,வங்கிக் கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, ரேஷன் அட்டை இதுபோன்று ஏதாவது ஒரு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இந்த பணி தற்போது தொடங்கியுள்ளது.

Top